வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் ஏல உரிமத்தை ரத்துசெய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏலம் ரத்துசெய்யப்பட்டதை அடுத்து மதுரை, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். 'இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளி' என தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.