ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. பேருந்து ஓட்டுநரை வெளுத்த கும்பல்

66பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து நேற்று (ஜன.22) இரவு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்துக்கு முன்னாள் பைக்கில் சென்ற இருவர் வழி விடாமல் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், "ஹாரன் அடித்தால் வழிவிட மாட்டீர்களா" என நடத்துநர் பூபாலன் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பைக்கில் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், பேருந்தில் ஏறி நடத்துநர் பூபாலன் மற்றும் ஓட்டுநர் ஓட்டுநர் கோகுல்நாத் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளது.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி