இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. கடந்த 2014 முதல் 2024 வரை பாஜக ஆட்சியில் பலர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை தடுக்க தானியங்கி ரயில் பாதுகாப்பு அம்சமான கவாச் பொருத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து ஏற்படும் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.