சீமான் புகைப்படம் குறித்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், தற்போது நடிகர் ராஜ்கிரன் எச்சரித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் எடுத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் கவனமாக இருங்கள். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்து, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு” என குறிப்பிட்டுள்ளார்.