சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை ஒடுக்க உத்தரவு

60பார்த்தது
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் தயாரித்த சட்டவிரோத வங்கதேசக் குடியேற்றவாசிகள் பற்றிய அறிக்கையை மேற்கோள்காட்டி, சிவசேனா முன்னாள் எம்பி ராகுல் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருட்டு முயற்சிக்கிடையே நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். இந்த குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி