பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில், ஒரு உறுப்பினருக்கு ஆண்டுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.436 பிடித்தம் வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்தால், ஏதேனும் காரணத்தால் இறக்க நேர்ந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்நிலையில், இத்திட்டத்தில் இருந்து விலக நினைப்பவர்கள், வங்கிக்கு சென்று சில ஃபார்ம்களை பூர்த்தி செய்து கொடுத்தால், இனி அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படாது.