பருவநிலை மாற்றங்களால் இந்தியாவில் குளிர்காலங்களில் சராசரி வெப்பநிலை உயர்ந்து வருவது வானிலை மைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 100 ஆண்டுகள் புள்ளி விவரங்களை ஆராய்ந்த போது அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட 1.01 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது. ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் 0.73 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலங்களில் அளவு சுருங்குவது தெரியவந்துள்ளது.