ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் நகைகள் மற்றும் செல்போனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார். மதுரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டு சந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 சவரன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். ஆட்டோவில் கைப்பை இருப்பதை பார்த்த ஓட்டுநர் நாகேந்திரன், காவல் நிலையம் சென்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.