வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு உலக வனவிலங்கு தினம் மார்ச் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் மோடி லயன் சஃபாரி சென்றார். தனது கேமிரா மூலம் விலங்குகளை படம் பிடித்த பின் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளாக வனவிலங்குகளை பாதுகாத்ததால் இந்தியாவில் புலி, சிறுத்தை, காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பெருமை தெரிவித்துள்ளார்.