LLD. பட்டப் படிப்பு அறிமுகம்!

78பார்த்தது
LLD. பட்டப் படிப்பு அறிமுகம்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பி.எச்.டி. பட்டப்படிப்பிற்கு மேலாக எல்.எல்.டி என்ற மிக உயரிய ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பு முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக நடைபெறும் எனவும் பி.எச்.டி. பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகு இப்படிப்பினைத் தொடர அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tndalu.ac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி