சென்னை மால்களில் உள்ள திரையரங்குகளில் சோதனை நடத்த உள்ளோம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் பேட்டியளித்துள்ளார். சென்னை ஆல்பர்ட் திரையரங்க கேண்டீனில் கெட்டுப்போன நிலையில் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஆய்வு பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானங்கள், 100-க்கும் மேற்பட்ட காலாவதியான பாப்கார்ன் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கேண்டீன் உரிமையாளரின் லைசன்ஸை ரத்து செய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.