பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்ப் பாசனத்தில் மின்மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது. விவசாயிகள் புதிய 4 நட்சத்திர தரத்திலான மின் மோட்டார் பம்பு செட்டை வாங்க ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இல்லையெனில், மொத்த பம்பு செட் விலையில் 50% மானியமாக வழங்கப்படும். தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசனம் நிறுவிய விவசாயிகளுக்கும், நிறுவ விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் இந்த மானியத்தை பெரும் தகுதி உள்ளது.