திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வரதட்சனை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் 8 மாதங்களாக அலைக்கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி மகளிர் காவல் நிலையம் முன்பு பெண்ணின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.