இந்த பூமியானது ஜீவராசிகள் அனைத்திற்கும் பொதுவானது. ஆனால் மனிதனின் நடவடிக்கைகளால் விலங்குகள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றன. விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவுகின்றன. உதாரணமாக யானை தனது சாணம் மூலம் ஒரு பெரிய காட்டையை உருவாக்கும் தன்மை கொண்டது. காடுகளை அழிப்பது என்பது ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கும் நாம் வைக்கும் வேட்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.