சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது கொத்தனார், தனது மகளையே பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 8 வயதாக இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் பரிசோதனையில் அவர் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் தந்தையே மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.