திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் ஞானமுத்து தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபகாலமாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார் இதனால் சம்பவம் நடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய மகன் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் முதியவர் ஞானமுத்துவின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.