புலிவலம்: நிலத்தகராறு... அண்ணன், தம்பி அடிதடி

5149பார்த்தது
புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய காட்டுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் மற்றும் சீனிவாசன். இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் இவர்களுக்குள் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் நிலவி வருகிறது. சம்பவம் நடந்த நேற்று சர்ச்சைக்குரிய இடத்தில் சீனிவாசன் தரப்பினர் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி உள்ளனர். அப்போது ஆனந்தன் இதை தட்டி கேட்டுள்ளார். இதை தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இருதரப்பினரும் காவல் புலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி