முசிறியில் வெளி மாநில மது பதுக்கி விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து டாட்டா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம்
முசிறியில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வாரம் மதுவிலக்கு போலீசார் முசிறியில் தா. பேட்டை ரோட்டில் ஒரு கட்டிடத்தை ஆய்வு செய்து அந்த கட்டிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 400 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதுசம்பந்தமாக
முசிறியைச் சேர்ந்த சரவணன் ( 44 )என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில்தொடர்புடைய இரண்டாவது குற்றவாளி திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் 24என்பவரை நேற்றுமுசிறியில் இயங்கும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் காரைக்காலில் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
முசிறியில் வெளி மாநில மது வகைகள் விற்ற இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.