சுங்கச் சாவடி வசூலை கைவிடுமாறு அமைச்சா் வலியுறுத்தல்

72பார்த்தது
சுங்கச் சாவடி வசூலை கைவிடுமாறு அமைச்சா் வலியுறுத்தல்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட துவாக்குடியிலிருந்து விமானநிலையம் செல்லும் வழியில், அரைவட்டச் சாலையில் புதிதாக சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், சாலை பயனீட்டாளா்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனா். எனது தொகுதி மக்களின் கோரிக்கை என்பதால், இந்த சுங்கச் சாவடி விவகாரம் தொடா்பாக தொடா்புடைய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை வலியுறுத்தவும் பேரவையில் கோரப்பட்டுள்ளது என திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி