ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

69பார்த்தது
ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருவெறும்பூா் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மூலவா்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திருச்சி குமாரவயலூா் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதேபோல, ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், உறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரா் கோயில், நாகநாதசுவாமி கோயில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகா் கோயில், வரகனேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், காஜா நகா் வேல்முருகன் கோயில், ஆண்டாா் தெருவில் உள்ள முருகன் கோயில், மேலப்புதூா் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இக்கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி