அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர் சந்திப்பு

1922பார்த்தது
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாநகர மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோ நீரில் ஆய்வு செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்று மாலை மாநகராட்சி மேயர், ஆணையர் இருவரும் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது புதிய முனையத்தை சென்று ஆய்வு செய்தது குறித்த கேள்விக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளவை மேலும் முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் புறப்பாடு செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்த்து பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளளேன்.

உங்களுடைய மகன் அருண் நேரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தந்தையாக நீங்கள் அவருக்கு சொல்லும் அறிவுரை என்ன என்று கேட்ட பொழுது அது தனியாக பேசிக்கொள்ளலாம் என பதிலளித்துவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி