முசிறி - Musiri

முசிறி: அதிமுக நகர அலுவலகம், நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக நகர செயலாளராக மாணிக்கம் என்கிற ஸ்வீட் ராஜா அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து முசிறி கைகாட்டியில் அதிமுக நகர அலுவலகம் திறக்கப்பட்டது. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்து கட்சி அலுவலகத்தையும், நீர் மோர் பந்தலையும் திறந்து வைத்தார், முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  முன்னாள் அமைச்சர்கள் என். ஆர். சிவபதி, டி. பூங்கோதை, அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா சின்னச்சாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அனைவரும் புதிய நகர செயலாளர் மாணிக்கம் என்கிற ஸ்வீட் ராஜாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஆமூர் ஜெயராமன், மாணவரணி செயலாளர் மதன்முக்கிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా