முசிறியில் கோரிக்கையை வலியுறுத்தி
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் தொடர்பாக
மாவட்ட நிலை அலுவலர்களின்
மீது மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் இருந்து விடுவித்து
தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் குடிமை பணி விதிகளின் கீழ் குற்றச்சாட்டு ஆணை பிறப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்வது குறித்து எந்தவித உத்தரவாதம் வழங்கவில்லை.
இதைக் கண்டித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் முசிறி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் 13 பெண் ஊழியர்கள் உட்பட 37 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
பல்வேறு பணிகள் காரணமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.