திருத்தலையூரில் ஊர் புற
நூலகம் விஸ்தரிப்பு செய்து புதிய கட்டிடம் - காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு -மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் ,
முசிறி ஊராட்சி ஒன்றியம் திருத்தலையூர் ஊராட்சியில் ஊர் புற நூலகத்திற்கு ரூ 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கங்கா தாரணிமாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் இந்த நூலகத்தில் எவ்வளவு நூல்கள் உள்ளது, எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர். இளைஞர்கள் போட்டித் தேர்விற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனரா? எனக் கேட்டறிந்தார். விழாவில் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா,
வட்டாட்சியர் லோகநாதன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.