முசிறி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சியாளர் அரசு ஊழியர்களை அவமரியாதை செய்ததாக கூறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கலை செயலாளர் அமுதா தலைமை வகித்தார். வட்டக்கலை பிரதிநிதிகள் சுதாராணி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஆட்சியாளர் அரசு ஊழியர்களை அவமரியாதையாக நடத்துவதை கண்டித்து பேசினர். கண்டனம் தெரிவித்தனர். இறுதியில் நிர்வாகி ஞானபிரபா நன்றி கூறினார்.