கரூர் மாவட்டம் ஆர்.டி. மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர், நேற்று(செப்.11) இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பட்டி புதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த கார் ஒன்று மகேந்திரன் மீது மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பவம்குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர்மீது வழக்குப் பதிவு செய்து இனாம்குளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.