முசிறி வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் பொறுப்பேற்பு

70பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக சுந்தர பாண்டியன் பொறுப்பேற்றார். மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆக பணிபுரிந்தவர் பணி மாறுதலில் முசிறியில் பொறுப்பேற்றார். மரியாதை நிமித்தம் முசிறி கோட்டாட்சியர் ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிய வட்டாட்சியருக்கு தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஜாபர், மண்டல துணை வட்டாட்சியர்கள் லதா மற்றும் தனபாக்கியம் தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், நிலஅளவர்கள் உள்ளிட்ட பலரும் சுந்தர பாண்டியன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி