சக ஊழியரின் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை, டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ரவிக்குமார் என்பவருக்கு நிகழ்ச்சியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.