குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தெப்ப உற்சவம்.

53பார்த்தது
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தெப்ப உற்சவம்.
முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி பெருமாள் மற்றும் உபநாச்சியாளர்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று. மகா தீபாரதனை காட்டப்பட்டது. இரவு எட்டு மணிக்கு மேல தாளங்கள் முழங்க, வெள்ளிக் கேடயத்தில் பெருமாள் தாயார் தெப்பத்தில் எழுந்தருளினார். எழுந்தருளிய பெருமாள் தாயாருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள் தொடர்ந்து நான்கு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தில் நான்கு புறங்களிலும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாள் தாயாரை பயபக்தியுடன் வணங்கி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் பெருமாள் தயார் கண்ணாடி அறை சேவையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை டிரஸ்டி கே. ஆர். பிச்சுமணி ஐயங்கார் தலைமையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி