BREAKING: கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேன் அடை

70பார்த்தது
BREAKING: கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேன் அடை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு புகார் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து நேரில் ஆய்வு செய்ததில், கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேன் அடை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் காவல்துறையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்திருந்த நிலையில், உடனடியாக தீர்வு எட்டப்பட்டது.

நன்றி வீடியோ: தந்தி செய்திகள்

https://twitter.com/i/broadcasts/1gqGvQgNeOQKB

தொடர்புடைய செய்தி