வேலூரில் மகளிர் உரிமை தொகை.. பயனடைந்த 2 லட்சம் பேர்

70பார்த்தது
வேலூரில் மகளிர் உரிமை தொகை.. பயனடைந்த 2 லட்சம் பேர்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் மற்றும் புதுமை பெண் உள்பட பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற மக்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 975 பேர் பயன்பெற்றுள்ளனர். விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 9 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்து 883 முறை பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி