திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது முசிறி கைகாட்டியில் வழக்கறிஞர் மகாலிங்கம், பாஸ்கர், முத்து டீ கடை, காந்தி நகர் தமிழ்செல்வன் மளிகைகடை காந்தி நகர், சாலியர் தெரு சக்தி டீ ஸ்டால், சேலம் மெயின்ரோடு சுந்தரவல்லி பெட்டிகடை ஆகிய 5 கடைகளிலும் 1 கிலோ 215 கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை அலுவலர்கள் பறிமுதல் செய்து 5 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டு மேல்நடவடிக்கைக்காக முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.