திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்தமுகாம்.. அமைச்சர் மகேஷ் ஆய்வு
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட திருவரம்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, லோமினாள் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு திருத்த முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் எவ்வாறு பணி செய்வது என்று அறிவுறுத்தினார். அதிகாரிகளிடம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறித்து கேட்டறிந்தார்.