அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9-12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இ-மெயில் ஐடி உருவாக்கித் தர கூறியுள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் மாணவர்கள் அடுத்து கல்லூரிகளில் சேர உதவிடும் வகையில் வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகள் போன்றவற்றை இ-மெயில் ஐடி மூலம் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. மின்னஞ்சலை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.