நாமக்கல் குமாரபாளையம் வெப்படையில் உள்ள தேநீர் கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர், பணி முடித்து நேற்றிரவு (நவ.16) கடைக்கு வெளியே உறங்கியுள்ளார். அப்போது, செல்போனையும், 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அருகில் வைத்திருந்த நிலையில், காலையில் அவற்றை காணாமல் கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செல்போன் மற்றும் பணத்தை தெருநாய் தூக்கிச் சென்றது தெரியவந்தது.