மணப்பாறை: தந்தை திட்டிய விரக்தியில் வாலிபர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மதகுபட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் டேனியல் வயது 22 இவர் கடந்த 22ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய டேனியல் வையம்பட்டி பகுதி என். பூலாம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்குச் சென்றார். மன உளைச்சலில் இருந்த டேனியல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் அக்கம் பக்கத்தினர் டேனியலை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.