தற்போதைய காலத்தில் பலரும் கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கின்றனர். இதனால் கண்களில் உள்ள நீர் அதிக வறட்சிக்கு உள்ளாகி, கண்கள் சிவந்து போதல், பார்வை மங்குதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு 20-20-20 என்கிற விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறையும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருட்களை (பசுமையான) 20 நிமிடங்கள் பார்க்க வேண்டும். இது உங்கள் கண்களுக்கு இளைப்பாற்றலை தந்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.