தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், திருச்சியை சேர்ந்த விஜய்யின் ரசிகரும், விபத்தில் உயிரிழந்தவரின் உறவினருமான நபர் ஒருவர், மாநாட்டில் வைத்து விஜய் ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை என கடும் கோபத்தில் பேசியுள்ளார். இறந்தவர்களின் இல்லத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (அக் 28) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.