
துவாக்குடி: மளிகை கடைக்காரர் மீது கத்தியால் தாக்குதல்
துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை வஉசி நகரைச் சேர்ந்தவர் நைனா முகமது இவரது மகன் ஹசன் முகமது இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று கடைக்கு வந்த துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நாகராஜ் சிகரெட் மற்றும் புகையிலை கேட்டதாகவும் அதற்கு ஹசன் முகம்மது தனது கடையில் அதை விற்பனைக்கு இல்லை என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் ஹசன் முகமதுவை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஹசன் முகமது அளித்த புகார் மீது நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில் காயம் அடைந்த ஹசன் முகமது துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.