சட்டவிரோத தணிக்கையில் ஈடுபடுவதாக மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000 மூலம் சட்டவிரோத தணிக்கை செய்யப்படுவதாக எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசு மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மஸ்க்கின் க்ரோக் ஏஐ அளிக்கும் பதில்கள் குறித்து விளக்கமளிக்கும்படி எக்ஸ் அதிகாரிகளிடம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.