இந்து சமய நிறுவனங்களின் தணிக்கைத் துறை பணியாளர் பொதுக்கூட்டம்

51பார்த்தது
இந்து சமய நிறுவனங்களின் தணிக்கைத் துறை பணியாளர் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு இந்துசமய அற நிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுகூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து தணிக்கை துறையைச் சேர்ந்த அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். புதிய தணிக்கை அலுவலகங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் தொடர்பான கோப்பு மூன்று ஆண்டுகளுக்குமேலாக நிலுவையில் உள்ளதால் இந்து சமய அறநிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கைகள் தேக்கமடைந்துள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய பணியிடங்கள் ஏற்படுத்துவது போன்று தணிக்கை துறையிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும். இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி