விவசாய நிலத்தில் விழுந்து தத்தளிக்கும் மலைப்பாம்பு

1121பார்த்தது
விவசாய நிலத்தில் விழுந்து தத்தளிக்கும் மலைப்பாம்பு
மணப்பாறை அடுத்த  மணியங்குறிச்சி பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராமன் குருநாதன் ஆகியோரின் விளைநிலத்தில் உள்ள 60 அடி ஆழக் கிணற்றில், சுமார் 7 அடி அளவில் தண்ணீர் இருக்கும் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மலைப்பாம்பு ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இந்நிலையில் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு தண்ணீரில் தத்தளித்து வருவதை நில உரிமையாளர்கள் வனத்துறைக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து புதன்கிழமை காலை   நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இறங்கி மலை பாம்பினை பிடிக்க சிரமப்பட்ட நிலையில் துவரங்குறிச்சி வனத்துறையினர் மலைப்பாம்பு தானாக மேலே ஏறி வர, கிணற்றிலிருந்து நிலம் வரை படிக்கட்டு அமைத்து உள்ளனர். பாம்பு இன்னும் 3நாட்களுக்குள் தானாக மேலே ஏறி கிணற்றில் இருந்து வெளியே வந்து விடும் என நில உரிமையாளர்களிடம் வனத்துறையினர் கூறி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி