திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோருக்கு பள்ளியிலிருந்து மாணவர்கள் கடிதம் எழுதும் வழக்கம் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் படிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தால் மது மற்றும் புகைப்பழக்கத்தை விட்டொழித்த 15பெற்றோர்களை சுதந்திர தினத்தையொட்டி விருந்தினராக அழைத்து பள்ளி நிர்வாகம் கவுரவித்தது. அந்த கடிதத்தில் குழந்தைகள் அடைந்துள்ள மன வேதனையைப் பார்த்த பிறகு இம்முடிவை எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.