துறையூர்: தனியார் கல்லூரியில் ம்பு பெட்டிகள் திருடிய மூவர் கைது
துறையூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் சிமெண்ட் தூண்கள் (பில்லர்) அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பிலான பெட்டிகள் (காலம் பாக்ஸ்) திருடியதாக போலீசாரால் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக வளாகத்தில் தூண்கள் (பில்லர்) அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பிலான பெட்டிகள் (காலம் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 50 இரும்புப் பெட்டிகள் திருடப் போனது தெரிந்தது. இதையடுத்து புலிவலம் போலீசில் கல்லூரி மேனேஜர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீசார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான இரும்புப் பெட்டிகளை திருடியதாக புத்தனாம்பட்டி மூக்கப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் லோகேஷ் (21), அதே ஊரில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டியன் மகன் அபிமன்யூ (20), ஓமாந்தூரைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ரமேஷ் (22) ஆகிய மூவரையும் கைது செய்து துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நர்மதாராணி முன்பாக ஆஜர்படுத்தினர்.