தெலுங்கானாவில் நிர்வாணமாக பாதயாத்திரை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் அகோரி, மீண்டும் மயானத்தில் பூஜை செய்துள்ளார். வாரங்கலில் உள்ள பெஸ்டம் செருவு மயானத்தில், சாம்பலை உடலில் பூசிக்கொண்டு, கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அகோரியை காண மக்கள் மயானத்தில் குவிந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.