திருச்சி: கழுத்து வலியால் தவித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பந்தலப்பேட்டை மேலமாங்காவனத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார் மகள் ஜெயஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சைபர் கிரைம் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் இரவு கழுத்து வலிப்பதாக தாய் செல்வியிடம் கூறினார் தாயும் ஜெயஸ்ரீக்கு கழுத்தை நீவி விட்டுள்ளார். பின்னர் செல்வி காபி போட்டுக்கொண்டு மகளுக்கு கொடுப்பதற்காக சென்று பார்த்த பொழுது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் மகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஜெயஸ்ரீ அக்கம்பக்கத்தின உதவியுடன் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய உள்ளனர் ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது.