தமிழகத்தை 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதிகளை தனியாக பிரிக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். அர்ஜுன் சம்பத்தின் இந்த கருத்தை திராவிட மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.