பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பெண் போலீஸ் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு கலந்து கொண்டு, இளஞ்சிறார் நீதி சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் உதவி மைய செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்தும், கிராம சபைக்கூட்டம், குழந்தை பாதுகாப்பு குழுக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்புகள் குறித்தும் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ரெயில்வே போலீசார் சுமார் 85 பேர் கலந்து கொண்டனர்.