துறையூர் அருகே இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

75பார்த்தது
துறையூர் அருகே இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டம் முசிறி கோட்டம் துறையூர் அடுத்த முருகூர் கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக வெறிநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் கணபதி மாறன் அறிவுரையின் படி, முசிறி கோட்டம் உதவி இயக்குனர் மருத்துவர் குணசேகர் முன்னிலையில் முருகூர் கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற முகாமில் சுமார் 28 நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மருத்துவர் குணசேகர் பொதுமக்களுக்கு வெறிநோய் குறித்தும் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். முகாமை முருகூர் ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி பால்ராஜ் தொடங்கி வைத்தார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் மதி, செந்தில்குமார் தமிழரசி கால்நடை பராமரிப்பு உதவியாளர் வித்யா ஆகியோர் கொண்ட குழு முகாமில் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். இறுதியாக முருகர் கால்நடை உதவி மருத்துவர் மதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி