மும்மூர்த்தி ஸ்தலமான உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா

60பார்த்தது
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தது திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டமானது நடைபெற்றது.
இதில் புருஷோத்தமர் உபயநாச்சியர்கள், சிறப்பு அபிஷேகம் செய்து பின் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்தோடு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். தேரோட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், சாந்தி மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி